பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பங்கேற்ற கூட்டங்கள் அனைத்திலும் ஊழல் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் ஞாயிறு அன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் என்றாலே கொள்ளையடிக்கும் கூடாரம், பொய்களின் சந்தை என்று கடுமையாக விமர்சனம் செய்தார். ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயிகளை கைவிட்டு விட்டதாக கூறிய மோடி காங்கிரஸ் அரசால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் காலை வாரி விடும் வேலையை செய்வதற்கே நேரம் சரியாக உள்ளது என்று விமர்சனம் செய்தார்.
ராஜஸ்தானில் இப்படி பேசிய மோடி கடந்த சனிக்கிழமை சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் அரசு என்றாலே அனைவருக்கும் ஊழல் தான் நினைவுக்கு வருகிறது என்றார். இந்த மாநிலத்தில் கொள்ளயைடிக்கப்படும் பணம் காங்கிரஸ் தலைமைக்கு செல்வதாக தெரிவித்த பிரதமர், காங்கிர கட்சிக்கு பணம் கொடுக்கும் இயந்திரமே சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் அரசுதன் என்று சாடினார்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் கூட்டத்தில் நேற்று பேசிய மோடி, வாரிசுகளை முன்னிறுத்தும் கட்சிகளின் அடிப்படை நோக்கமே ஊழல் செய்வதுதான் என்று பேசினார்.
கடந்த மாதம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசியது பற்றி சில தினங்களுக்கு முன்பு பேசிய பிரதமர், ஊழல் செய்வதற்காக அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு இருப்பதாக விமர்சனம் செய்தார். அந்த கட்சிகள் ஊழல் செய்வதற்கு உத்திரவாதம் கொடுக்குமானால் ஊழைலை ஒழிப்பதுதான் என் நோக்கம் என்று உத்திரவாதம் கொடுக்கிறேன் என்றார்.
இதன் மூலம் தெரிவது என்னவென்றால், இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான், சத்தீஷ்கர்,தெலுங்கானா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊழலை முன்னிறுத்தும் பிரச்சாரத்தை மோடி முன்னெடுக்க இருப்பது உறுதியாகி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலின் போதும் மோடியின் பிரச்சாத்தில் ஊழல் எதிர்ப்பே முக்கியமானதாக இருக்கும் என்பது தெரிகிறது.
கர்நாடக மாநிலத்தை ஆண்ட பாஜக அரசை 40 சதவிகித கமிஷன் அரசு என்று காங்கிரஸ் அரசு குற்றஞ்சாட்டி ஆட்சியை பிடித்தது குறிப்பிடத் தக்கது.
000