ஆகஸ்டு, 15-
நாட்டின் 77- வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
அவர் செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவது இது 10- வது முறையாகும்.
10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மோடி பேசியதாவது ..
உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக இந்தியர்கள் உருவாகி உள்ளனர்.
இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டின் கிராமங்களில் இருந்து திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகின்றனர்.
இந்தியா நவீனத்துவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்தியா இந்த பயணத்தில் நிலையாக இருக்க நிலையான அரசு தேவை.
நாட்டின் வளர்ச்சிக்கு உறுதியான அரசை மக்கள் விரும்புகின்றனர்.
இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கொரோனா காலத்திற்குப் பிறகு உலகத்தையே இந்தியா தான் வழிநடத்துகிறது.
உலகம் நிலைத்தன்மையுடன் இயங்குவதற்கு இந்தியா தான் காரணமாக உள்ளது.
சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் இதுவே நமது தாரக மந்திரம்.
2014, 2019ஆம் ஆண்டு பெரும்பான்மை கொண்ட அரசை மக்கள் தேர்வு செய்தனர்.
பெரும்பான்மை அரசால்தான் சீர்திருத்தங்களை செய்ய முடியும்.
இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை ஊழல் கட்டுப்படுத்திய நிலையில் அதை நீக்கினோம்.
மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தனர்; மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி மாற்றங்களை கொண்டு வந்தோம்.
புதிய நம்பிக்கையோடு இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது; ஊழல் என்ற தடையை நீக்கியதால் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
முத்ரா யோஜனா திட்டத்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாதான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு – பிரதமர் மோடி.
140 கோடி உறுப்பினர்களைக் கொண்ட எனது குடும்பம் இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
இந்தியா தனது எதிர்காலத்தை தானே வடிவமைத்துக்கொள்ளும் திறனை பெற்றுள்ளது.
இளைஞர்கள்தான் நமது நாட்டின் வளர்ச்சியை வழி நடத்திச்செல்கின்றனர்.
மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்; அங்கு தற்போது அமைதி திரும்பி வருகிறது.
அமைதியின் மூலமாக மட்டுமே மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து முயற்சி.
மணிப்பூரில் வன்முறையால் பலர் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்த நாடும் மணிப்பூர் மக்களுக்காக துணை நிற்கிறது.
இவ்வாறு மோடி பேசினார்
…