ஜனவரி-07,
நாட்டின் தலைநகரமான டெல்லி சட்டசபைக்கு அறிவிக்கப்பட்டு உள்ள பொதுத் தேர்தலில் வென்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைக்குமா அல்லது பாரதீய ஜனதா ஆ ட்சியைக் கைப்பற்றுமா என்பது நாடு முழுவதும் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.
டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 5- ம் தேதி, ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
வேட்பு மனு தாக்கல் தொடக்கம் 10.012.25
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் 17.01.2025
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18.01.2025
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் 20.01.2025
தேர்தல் நாள் 05.02.2025
வாக்கு எண்ணிக்கை 08.02.2025.
டெல்லியில கடந்த 2013- ஆம் ஆண்டு முதற்கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் மூன்று முறை முதலைமைச்சராக இருந்தாலும் வழக்குகள் தொடர்பாக சில மாதங்கள் முன்பு பதவியில் இருந்து விலகிக் கொண்டு ஆதுஷி என்பவரை பதவியில் அமர்த்தி உள்ளார். இப்பேோது கெஜ்ரிவால் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக மட்டும் இருக்கிறார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளையும் பாரதீய ஜனதா கட்சி கைப்பற்றியது. காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.
இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஆம் ஆத்மி 70 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்துகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் புதுடெல்லி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஊழல் ஒழிப்பாளராக தம்மை முன்னிறுத்திக் கொண்டு அரசியல் களத்திற்கு வந்த கெஜ்ரிவால் தமது டெல்லி அரசின் மதுபான ஊழல் வழக்கில் சிபிஜயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். இதனால் “ஊழல் கரை படியாதவர்” என்ற இமேஜ் அவருக்கு இப்போது இல்லை.
எனவே இந்த தேர்தல் கெஜ்ரிவாலுக்கு கடினமானதாகவே இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
*