மீண்டும் ‘பிஸி’ ஆகியுள்ள ‘ இசைப்புயல்’
ஏ.ஆர்.ரஹ்மான், தெலுங்கு சினிமாவில் இசை அமைக்க 8 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்கிறார்.
தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகன்,
ராம்சரண்.குளோபல் ஸ்டார்’ என அழைக்கப்படுகிறார்.
தெலுங்கு சினிமா உலகின் உச்ச நடிகளில்ஒருவர் , அவர்.எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கிய ‘ஆர் ஆர் ஆர்
திரைப்படம், அவரை வேறொரு உயரத்துக்கு
தூக்கி சென்றது.
இதனை தொடர்ந்து ராம் சரண், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில்‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்தார். படு சுமாரான
விமர்சனங்களை பெற்றஅந்தப்படம் எதிர் பார்த்த அளவுக்கு ஓடவில்லை.தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
அடுத்ததாக ‘உப்பென்னா’ படப்புகழ் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில்,ராம் சரண் நடிக்கிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை தெலுங்கில்
முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ராம் சரண் ஜோடியாக நடிக்கிறார். கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
ராம் சரணின் 16 – வது படம் என்பதால் , இந்தப்படத்துக்கு தற்காலிகமாக ‘RC 16’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
குத்துச்சண்டை வீரர் கோடி ராமமூர்த்தி என்பரின் , வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு, இதன் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் நடிக்க ராம் சரண், விசேஷ பயிற்சி எடுத்து வருகிறார்.
அவரது தோற்றம் வித்தியாசமாக உள்ளதால் , ஷுட்டிங்்ஸ்பாட்டில் பயங்கர கெடுபிடி. அவரை யாராவது , போட்டோ எடுத்து விடுவார்கள்என்பதால், படப்பிடிப்பு தளத்துக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
அவருக்கு 8 கோடி ரூபாய் சம்பளம்.
கடந்த ஆண்டு தென்னிந்திய மொழிகளில்இசை அமைப்பாளர் அனிருத் கை , ஓங்கி இருந்தது.அவர் இசை அமைத்த இந்தியன் -2, வேட்டையன்,விடாமுயற்சி ஆகிய படங்கள் சொல்லி வைத்த மாதிரி சுருண்டன.
இதனால் அவருக்கு கிராக்கி குறைந்து ரஹ்மான்
காட்டில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
—