என்னங்க இது, அநியாயமா இருக்கு….. எரியுற நெருப்புல எண்ணெய் ஊத்தாதீங்க ஸ்டாலின் – எடப்பாடி கண்டனம்!

June 20, 23

அரசின் அனைத்து வரி மற்றும் கட்டணங்கள் ஏற்கனவே உயர்த்தப்பட்ட நிலையில், சாலை வரியை உயர்த்த திமுக அரசு முடிவெடுத்து உள்ளது கண்டனத்திற்க்கு உரியது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள  அறிக்கை வருமாறு,

“‘விடியல் தருவோம்’ என்று கூறி ஆட்சியைப் பிடித்த விடியா திமுக அரசு, சாலை வரியை 5 சதவீதம் அளவிற்கு உயர்த்துவதற்கு முடிவெடுத்துள்ளதாக அனைத்து நாளிதழ்களிலும் வெளிவந்துள்ள செய்தி, ஏற்கெனவே தமிழக மக்களின் வயிற்றில் எரிந்து கொண்டிருக்கும் தீயில், எண்ணெய் வார்த்ததைப்போல் உள்ளது.
ஏற்கெனவே வாகனங்கள் வாங்கும்போது ஆயுட்கால வரி செலுத்தியுள்ள சூழ்நிலையில், ஏன் நாங்கள் டோல்கேட் வரி செலுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த டோல்கேட் வரியும் குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்த்தப்படும் நிலையில், இந்த விடியா திமுக அரசு மீண்டும் வாகனங்களுக்கான சாலை வரியை 5 சதவீதம் அளவிற்கு உயர்த்த முடிவெடுத்திருப்பது தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

இந்த விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஏற்கெனவே இரண்டு முறை மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, பேருந்துகளில் மறைமுகக் கட்டண உயர்வு என்று அரசுக்கு வரும் வரி வருவாய்களை உயர்த்தி உள்ளது. இப்படி வாக்களித்த தமிழக மக்களை கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், கடந்த 10 ஆண்டுகால அம்மாவின் ஆட்சியில் உயர்த்தப்படாத சாலை வரியை, தற்போது 5 சதவீதம் வரை உயர்த்த முடிவெடுத்திருப்பதைப் பார்க்கும்போது, தமிழக மக்களிடம் இருக்கும் கடைசி ரூபாயையும் பிடுங்கும் நோக்கத்தில் இந்த விடியா திமுக அரசு செயல்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது”

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *