ஆகஸ்டு,31-
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியை சேர்ந்தவர் அபர்ஜித். கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அபர்ஜித்தை துப்பாக்கி முனையில் வழிமறித்த இரண்டு பேர், அவரது பைக், செல்போன், மற்றும் பர்சை பறித்துக்கொண்டுதப்பிச்சென்றனர்.
இது குறித்து அபர்ஜித் அங்குள்ள சாபியா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.இந்த கொள்ளை தொடர்பாக அங்கித் வர்மா உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனால் அங்கித் தலைமறைவானார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அங்கித் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த அங்கித் வர்மாவுக்கு, போலீசார் தன்னை என்கவுண்டரில் போட்டு தள்ளி விடுவார்கள் என அச்சம் ஏற்பட்டது.இதனால் அவர் போலீசில் சரண் அடைய முடிவு செய்தார்.
சாபியா போலீஸ் நிலையத்துக்கு நான் சரண் அடைய வந்துள்ளேன் – என்னை சுட்டுவிடாதீர்கள் என்ற பதாகையை கழுத்தில் அணிந்தவாறு அங்கித் சென்றார்.இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏர்பட்டது. அவரை போலீசார் என்கவுண்டர் செய்யவில்லை .அங்கித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
யோகி ஆதித்யநாத் ஆட்சியில் போலீசை கண்டு குற்றவாளிகளுக்கு பயம் வந்துள்ளது. தங்களை போலீசார் என்கவுண்டர் செய்து விடுவார்கள் என நடுங்கி தானாகவே. காவல்நிலையங்களில் சரண் அடைந்து வருகின்றனர்’’ என போலீசார் தெரிவித்தனர். என்கவுண்டருக்கு பயந்து தலைமறைவாக உள்ள நம்ம ஊர் குற்றவாளிகளும், அங்கித் போன்று பதாகை மாட்டிக்கொண்டு போலீஸ் நிலையங்களுக்கு, செல்லலாமே?
000