என்எல்சியின் அத்துமீறல்களுக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதாக அதிமுக குற்றச்சாட்டு.
கடலூர் மக்கள் பிரச்னையிலும் பாம்புக்கு தலையையும், மீனுக்கு வலையும் காட்டும் போக்கு என இபிஎஸ் கண்டனம்.
என்எல்சி விவகாரத்தில் கடலூர் மாவட்ட மக்களின் உயிர்நாடிப் பிரச்னையில் திமுக அரசு தொடர்ந்து பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் போக்கில் ஈடுபட்டால் அதிமுக சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்படும்- அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.