மோகன்லால் நடித்த ‘ எம்புரான் ‘ தியேட்டர்களில்
ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மம்முட்டி நடித்த
புதிய படம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
பிரிதிவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த
‘எம்புரான்’ கலவையான விமர்சனங்களை
பெற்றாலும் வசூலில் குறை வைக்கவில்லை.
கடந்த 27 – ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படம், கடந்த
7 நாட்களில் இந்தியாவில் மட்டும் 85 கோடி ரூபாய்
வசூலித்துள்ளது.
இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ,
படம் வெளியான பிறகு 24 இடங்களில் கத்திரி போட்டு,
சில காட்சிகளை வெட்டினர்.
மீண்டும் சென்சார் போர்டுக்கு படம் காட்டப்பட்டு,
மறு தணிக்கை செய்து திரையிட்டனர்.
இந்த நிலையில் மோகன்லாலின் போட்டியாளரான
மம்முட்டி நடித்துள்ள ‘பசோகா’எனும் திரைப்படம்
வரும் 10 – ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. டைரக்டர் கவுதம்
மேனன் , முக்கிய வேடத்தில் நடித்துள்ள, இந்த
படத்தை அறிமுக இயக்குநர் தினோ டென்னிஸ்
இயக்கியுள்ளார்.
மம்முட்டி ரசிகர்கள் ஆர்வத்தோடு, காத்திருக்கும்
இந்த படம் எம்புரான் பட வசூலை முறியடிக்கும் என
அவர்கள்,பந்தயம் கட்டி உள்ளனர்.
மம்முட்டி படம் தவிர, ஃபாசில் ஜோசப்பின்
‘மரண மாஸ்’ மற்றும் நஸ்லானின் ‘ ஆலப்புழா
ஜிம்கானா’ ஆகிய படங்களும் 10 ஆம் தேதி
வெளியாகிறது.
யார் முந்துகிறார்கள் என்று பார்க்கலாம் .
—