‘லூசிபர்’ என்ற மலையாள படத்தின் இரண்டாம் பாகமான ‘ எம்புரான்’ 27 – ஆம் தேதி உலகம் முழுவதும்
வெளியானது.
மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியார்
உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை நடிகர்
பிரிதிவிராஜ் இயக்கியுள்ளார்.
குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இந்த படத்தில்
இடம் பெற்றதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு
தெரிவித்துள்ளன.
இதனால் சர்ச்சைக்கு உரிய 3 நிமிட காட்சிகள்
நீக்கப்பட்டுள்ளன.
‘எம்புரான்’ படத்தை கேரள முதலமைச்சார் பினராயி
விஜயன், திருவனந்தபுத்தில் உள்ள ஒரு சினிமா
தியேட்டரில் பார்த்து ரசித்தார்.
படத்தை புகழ்ந்து , தனது சமூக வலைத்தளத்தில்
பினராயி விஜயன் எழுதியுள்ளார்.
‘ நாடு இதுவரை கண்டிராத இனப்படுகொலை
குறித்து எம்புரான் பேசியுள்ளது-இது சங் பரிவார் அமைப்புகளை கோபம் அடையச்செய்துள்ளது ;
மலையாள திரை உலகத்தை இந்தப்படம்
புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும்-‘என்று
குறிப்பிட்டுள்ளார், பினராயி விஜயன்.
இதனால் எம்புரான் படத்தை மையமாக வைத்து கேரள மாநிலத்தில் அரசியல் மோதல்கள் சூடிபிடித்து உள்ளது. படத்தின் வசூலும் மலையாள மண்ணில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
—