இன்று வெளியாகும் ‘எம்புரான்’ திரைப்படத்துக்கு தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் சிக்கல் உருவாகியுள்ளதாக விநியோகஸ்தர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகிறது.மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள , இந்த படத்தை பிரிதிவிராஜ் ,இயக்கியுள்ளார்.
படத்துக்கு பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளதால் , மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மலையாளப்படங்களுக்கு தென் இந்தியாவில் இருக்கும் அளவுக்கு வட இந்தியாவில் வரவேற்பு கிடைப்பதில்லை. ஆனால் ‘எம்புரான்’ வட இந்தியாவிலும் கொடி நாட்டும் என்கிறார்கள், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள்.
ஆனாலும் ஒரு சிக்கல். எம்புரான் இன்று ரிலீஸ் ஆகும் நிலையில் சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ திரைப்படம் வரும் 30 ஆம் தேதி வெளியாகிறது. இன்னும் மூன்று நாட்கள் எம்புரானுக்கு வடக்கு தேசத்தில் பிரச்சினை இல்லை.
சிக்கந்தர் படம் ஓரளவு நன்றாக இருந்தாலும், எம்புரானுக்கு அங்கே பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
தமிழ்நாட்டிலும், இதே போன்ற சிக்கலை எம்புரான் எதிர்கொண்டுள்ளது. விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படமும் இன்றுதான் ரிலீஸ்.
எனினும் தமிழ்நாடு தவிர மற்ற தென் மாநிலங்களில் எம்புரானுக்கு பாதிப்புகள் ஏற்படாது என்கிறார்கள், சினிமா வட்டாரத்தில்.
‘ தமிழ்நாட்டில் விக்ரம் ரசிகர்கள், வீர தீர சூரனுக்கே முன்னுரிமை அளிப்பார்கள் – ஆனால் இரண்டு படங்களும் வேறு வேறு களங்கள் –வேறு வேறு சந்தைகள்-எனவே விக்ரம் படத்தால் மோகன்லால் படத்துக்கு ஆபத்து இல்லை’என்போரும் உண்டு.
இன்னும் சில மணி நேரங்களில் ‘ரிசல்ட்’ தெரிந்து விடும்.
—