லூசிபர் படத்தின் 2 ஆம் பாகமான ‘ எம்புரான் ‘ உலகம் முழுவதும் கடந்த வியாழக்கிழமை ரிலீஸ் ஆனது.
பிரிதிவிராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில், மோகன்லால். டவினோ தாமஸ், மஞ்சுவாரியார், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளிவந்துள்ள ‘எம்புரான்’ கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்துக்களை மோசமாக இந்த படம் சித்திரித்துள்ளதாக வலதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டின.ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பத்திரிகையான ‘ஆர்கனைசர் இதழில் எம்புரான் படத்துக்கு கண்டனம் தெரிவித்து கட்டுரை வெளியானது.
‘கோத்ரா ‘ ரயில் எரிப்பு சம்பவத்தை இயக்குநர் பிரிதிவிராஜ் தவறான கண்ணோட்டத்தில் காட்சி படுத்தியுள்ளார் ’என அந்த இதழ் குற்றம் சாட்டி இருந்தது.இதனை அடுத்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலன், சர்ச்சைக்கு உரிய காட்சிகளை நீக்குமாறு டைரக்டர் பிரிதிவிராஜிடம் கூறினார்.
இதனை ஏற்ற இயக்குநர், படத்தின் 17 இடங்களுக்கு கத்திரி போட்டு நீக்கி விட்டார்.அவை பெரும்பாலும் வன்முறை காட்சிகள்.
எம்புரான் படம் நாளை மறு தணிக்கைக்கு செல்கிறது.
சில நாட்களில் மறு தணிக்கை செய்யப்பட்ட புதிய பதிப்பு தியேட்டர்களில் வெளியிடப்படும்.
—