செப்டம்பர், 04-
சினிமா மீது கொண்ட காதலால் நெல்லை சீமையில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தவர் ராஜு முருகன் .ஆரம்பத்தில்
பத்திரிகையாளராக பணியாற்றினார்.பின்னர் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். ‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ ஆகியதரமான படங்களை கொடுத்தார்.
இதனைத்தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கியுள்ள படம், ‘ஜப்பான்’. இதில் கார்த்தி ஹீரோ. அவர் ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசைஅமைத்துள்ளார். தீபாவளி அன்று திரைக்கு வருகிறது. இது-
கார்த்தி நடிக்கும் 25வது படமாகும்.
அடுத்து, நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இதில் எம்.ஜி.ஆர்.ரசிகனாக அவர் நடிக்கிறார். படங்களில் எம்.ஜி.ஆர் ஏற்றிருந்த வேடங்களில் கார்த்தி தோன்றுகிறார். பிரபலமான எம்.ஜி.ஆர்.படங்களில் அவர் ஏற்று நடித்த ‘கெட்டப்’களில் கார்த்தியை வைத்து விதம் விதமாக போட்டோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. தற்காலிகமாக ‘கார்த்தி 26’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.வெளிநாடுகளிலும் சில காட்சிகளை எடுக்க திட்டமுண்டு.
கார்த்தி ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சத்யராஜ், ராஜ்கிரண் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஆக்ஷனுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்துக்கு ‘ரத்தத்தின் ரத்தமே’ அல்லது ‘வா வாத்தியாரே’ எனபெயர் சூட்டப்படும் என்று தெரிகிறது. அரசியலுக்கு வர முன்னோட்டமா வாத்தியாரே?
000