எல்லையில் அமைதி நிலவினால் மட்டுமே சுமூகநிலைக்கு வாய்ப்பு- சீனாவிடம் இந்தியா விளக்கம்

மே.6

இரு நாட்டு எல்லை பகுதியில் அமைதி நிலவும் வரை இருதரப்பு உறவுகளில் சுமுகநிலை ஏற்பட வாய்ப்பில்லை என சீனாவிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

கோவாவின் பனாஜி நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு சார்பில் 2 நாள் மாநாடு நடைபெற்றது. இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அதன்படி, ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கெய் லவ்ரவ், சீன வெளியுறவு துறை அமைச்சர் கின் கேங் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ உள்ளிட்டோர் கோவாவுக்கு வந்தனர்.

இந்த சந்திப்பின்போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை மேற்கொண்டார். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மண்டல பாதுகாப்பு போன்ற முக்கிய புவிஅரசியல் விவகாரங்கள் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில், இந்தியா மற்றும் சீனா இடையே சுமுக நிலை காணப்படுவதாககவும், அசல் எல்லை கோட்டில் நிலைமை ஸ்திரத்தன்மையுடன் இருப்பதாகவும் சீன தலைமை தொடர்ந்து கூறிவந்தது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங் உடனான இருதரப்பு சந்திப்பில், எல்லை பகுதியில் காணப்படும் நிலைமை பற்றி மிக வெளிப்படையாக ஆலோசனை நடத்தப்பட்டது. எல்லை பகுதியில் இயல்பற்ற நிலை நிலவுகிறது. அதுபற்றிய வெளிப்படையான ஆலோசனை மேற்கொண்டோம் என்றே நினைக்கிறேன். இது முதன்முறையாக நடந்த ஆலோசனை அல்ல. ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாகக்கூட கின் கேங்கிடம் இந்த விவகாரம் பற்றி நான் பேசியிருக்கிறேன். லடாக் பிரிவில் அசல் எல்லை கோட்டு பகுதியில் இருந்து முன்கள வீரர்களை திரும்பப் பெறும் நடைமுறையை இந்தியா மற்றும் சீனா முன்னெடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதுபற்றி பொதுவெளியிலும் மற்றும் தனிப்பட்ட உரையாடல்களின்போதும் சீன தரப்பிடம் தெளிவாகவும் மற்றும் வெளிப்படையான முறையிலும் தெரிவித்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *