எவரெஸ்ட் சிகரம் தொட்ட 2வது தமிழன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

மே.21

சென்னை கோவளத்தைச் சேர்ந்த அலைச்சறுக்கு விளையாட்டு வீரர் இராஜசேகர் பச்சை என்ற இளைஞர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு அருகில் உள்ள கோவளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் பச்சை. 27 வயது இளைஞரான இவர், கடந்த 19ம் தேதி அதிகாலை சுமார் 5-30 மணியளவில் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, அடிவாரத்திற்கு திரும்பி சாதனை படைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இரண்டாவது தமிழர் என்ற பெருமையையும் ராஜசேகர் பச்சை பெற்றுள்ளார். இவர், அலைச் சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜசேகர் பச்சையின் இந்த சாதனைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள். அந்தவகையில் கோவளத்தைச் சேர்ந்த இராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தைத் தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று சிகரத்தை எட்டி அடைந்த ராஜசேகர் பச்சைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், “பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள். அந்தவகையில் கோவளத்தைச் சேர்ந்த இராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய எவர்ஸ்ட் சிகரத்தைத் தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு எனது பாராட்டுகள்” என்று பதிவிட்டுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *