நாஞ்சில் நாடான நாகர்கோவில்காரர், என் .எஸ்.கிருஷ்ணன்,
1935 -ஆம் ஆண்டு வெளியான மேனகா என்ற
படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அறிமுக படமான சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தார்.
முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் என்.எஸ்.கே. தனது படங்களில் நகைச்சுவை மூலம் சமூகத்திற்குதேவையாக கருத்துக்களை கொடுத்தவர்.நடிகர் விவேக்கின் மானசீக குரு. கலைவாணர் என்ற பட்டத்துடன்வலம் வந்தவர். என்.எஸ்.கிருஷ்ணன்.
ஜெமினி ஸ்டூடியோவில் அவருக்கு ஒரு கசப்பான
அனுபவம் ஏற்பட்டது.
ஜெமினி ஸ்டூடியோவில் நட்சத்திரங்கள்
உள்ளிட்டோர் நேரடியாக ஸ்டூடியோவுக்குள் காரில்
செல்ல முடியாது. அந்த ஸ்டூடியோவின் நுழைவு வாயிலில் ஒரு சங்கிலி கட்டப்பட்டிருக்கும். அங்கேயே காரை நிறுத்திவிட்டு ஸ்டூடியோவுக்கு நடந்து தான் செல்ல வேண்டும்.
ஜெமினி நிறுவனம் தயாரித்த மங்கம்மா சபதம் படத்தில்
என்.எஸ்.கிருஷ்ணன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
படப்பிடிப்புக்கு என்.எஸ்.கிருஷ்ணன், காரில் வந்தபோது, ஜெமினி ஸ்டூடியோவின் காவலாளி அவரை தடுத்து நிறுத்தி,
காரை இங்கு விட்டுவிட்டு நடந்து செல்லுங்கள் என்று
கூறியுள்ளார்.
‘ ஏன் ஏன் ஏன்’ என்று என்.எஸ்.கிருஷ்ணன்
கோபத்துடன் கேட்டுள்ளார்.
‘ இது முதலாளியின் ஆர்டர்’
என வாட்ச்மேன் சல்யூட் அடித்தபடி கூறினார்..
இதை கேட்ட.கிருஷ்ணன், ‘இந்த சங்கிலியை எடுத்தால் தான் படத்தில் நடிக்க வருவேன் என்று முதலாளியிடம் சொல்லிவிடுங்கள் ‘என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
தகவல் ஜெமினி ஸ்டூடியோ
அதிபர் எஸ்.எஸ்.வாசனுக்கு சென்றது. அதிர்ச்சியான அவர், உடனடியாக தனது முடிவை மாற்றிக்கொண்டு, அங்கு சங்கிலி போடுவதை நிறுத்திக்கொண்டு அனைவரும் காரில்
உள்ளே வர அனுமதித்தார். அதன்பிறகு படப்பிடிப்பில்
கலந்துகொண்ட என்.எஸ்.கிருஷ்ணன்
அந்த படத்தில் நடித்து முடித்தார்.
–