இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வரும் 8ம் தேதி தமிழகம் வருகிறார். இதையொட்டி, வரும் சனிக்கிழமை சென்னை முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை- கோவை இடையேயான அதிகவே வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இதற்காக நாளை மறுநாள் (ஏப்.8) பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலமாக சென்னை வருகிறார்.
முதல் நிகழ்ச்சியாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து கோவை வரை செல்லும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர், மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து, பல்லாவரம் பகுதியில் பொதுமக்களிடம் 20 நிமிடம் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். இதையொட்டி, சென்னையில் ஆளில்லா விமானங்கள், ட்ரோன் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏப்ரல் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதுமலை புலிகள் சரணாலயத்தையும் பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிடவுள்ளார். முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் யானைகளை பார்வையிடும் அவர், யானை பாகன்களுடனும் கலந்துரையாடவுள்ளார். பின்னர், ஆஸ்கார் விருது பெற்ற The Elephant Whisperers ஆவணப்படத்தில் நடித்த பாகன்கள் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதிகளுடனும் பிரதமர் கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.