ஏழுமுறை தேசியவிருது பெற்றவருக்கு 70 வயது

ஜுலை, 13 –

கண்ணதாசன், வாலிக்கு;g பிறகு தமிழ் திரை உலகுக்கு கிடைத்த கவிதைப் புதையல் வைரமுத்து.

எதிர்மறை அர்த்தத்தைக் கொண்ட நிழல்கள் படம் மூலம் 1980 ஆம் ஆண்டு சினிமாவுக்கு வந்தவர்,நமது கவியரசர்.43 ஆண்டுகளாக உச்சத்தில் நிற்கிறார். பத்மஸ்ரீ,பத்மபூஷன்,தேசிய விருது, சாகித்ய அகாடமி என அனைத்து விருதுகளும் இவரை தேடி வந்தன.

தமிழில் கவிதை தொகுப்பு, நாவல்கள் என 37 நூல்கள் இயற்றியுள்ளார்’கள்ளிக்காட்டுஇதிகாசம்’ இவருக்கு சாகித்ய அகாடமி விருதை பெற்றுத்தந்தது. 22 மொழிகளில் அந்த நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 7முறை  சிறந்த பாடலுக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.இதுவரை இந்திய சினிமாவில் எந்த ஒரு பாடலாசிரியரும்  இத்தனை முறை தேசிய விருது பெற்றதில்லை என்பது, தமிழ்நாட்டுக்கு கிடைத்த கவுரவம்.

5,800 பாடல்கள் எழுதியுள்ள வைரமுத்து, இசைஜாம்பவான்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பில் அமுதகானங்களை அள்ளித்தெளித்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், தனுஷ், விக்ரம் உள்ளிட்டோருக்கு காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்துள்ளார்.

’இது ஒரு பொன்மாலைப்பொழுது’ எழுதியவருக்கு இன்று, ஒரு பொன்காலைப்பொழுதாக அமைந்தது.

ஏன்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வைரமுத்துவின் இல்லத்திற்கு காலையிலேயே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.. முத்து எங்கள் சொத்து என்று கொண்டாடப்படும் கவியரசருக்கு இன்று பிறந்தநாள். தனது 70 வயது அகவையில் அடி எடுத்து வைக்கிறார்,கருப்பு தங்கம்.

ஒட்டு மொத்த திரை உலகமே அவரை வாழ்த்துகிறது. நாமும் வாழ்த்துவோம்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *