ஐபிஎல் போட்டி : சென்னை சூப்பர்கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்

மே.6

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன.

இன்று மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே அணி 10 ஆட்டங்களில் விளையாடி 11 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது. இந்த சீசனில் சொந்த மண்ணில் 2-வது முறையாக பிற்பகல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி மோத உள்ளது.

இந்த சீசனில் சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் அணிகள் 2வது முறையாக மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 8ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வீழ்த்தியது.

மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6வது இடத்தில் இருந்துவருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸை 4 வருடங்களுக்குப் பிறகு சிஎஸ்கே அணி இன்று எதிர்கொள்கிறது. கடைசியாக 2019ம் ஆண்டு தொடரில் இரு அணிகளும் சேப்பாக்கத்தில் மோதின. அந்த சீசனில் லீக் சுற்று மற்றும் பிளே ஆஃப் சுற்றின் முதலாவது தகுதி சுற்று என இரு முறை சிஎஸ்கேவை மும்பை இந்தியன்ஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி – பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *