ஐ.பி.எல் 2023 – ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..!!

மே.1

மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

மும்பை, 16-வது ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் களமிறங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து, அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்னிலும், படிக்கல் 2 ரன்னிலும், ஹோல்டர் 11 ரன்னிலும், ஹிட்மயர் 8 ரன்னிலும், துருவ் ஜுரேல் 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றத்தை அளித்தனர்.

ஒருபக்கம் விக்கெட்கள் சரியத் தொடங்கிய நிலையில், மறுபக்கம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை ஆடத்தொடங்கினார். ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 16 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் உள்பட 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ராஜ்ஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்தது.

213 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கினர் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா. இஷான் கிஷன் ரோகித் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ஆடிய கமரூன் கிரீனுடன் ஜோடி சேர்ந்த கிஷன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இஷான் கிஷன் 28 ரன்னில் வெளியேறிய நிலையில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரீன் 26 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 3 பந்துகளில் டிம் டேவிட் அடுத்தடுத்து 3 சிக்சர்களை அடித்துப் பந்தைப் பறக்கவிட்டார். இறுதியில் 19.3 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *