June 17, 23
ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 291 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மின்னல் வேகத்தில் மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், நேற்று வரை 289 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம்டைந்தனர். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று ஒருவர் உயிரிழந்ததால் அலி எண்ணிக்கை 290 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக ஒடிசா ரயில் விபத்தில் மொத்த பலி எண்ணிக்கை 291 ஆக உயர்ந்துள்ளது. , ஒடிசா ரயில் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் கட்டாக்கின் எஸ்சிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது.