ஜூன்.5
ஒடிசாவில் 275 பேர் உயிரைப் பலிகொண்ட ரயில் விபத்து அரங்கேறிய தண்டவாளத்தில், 51 மணி நேர சீரமைப்புக்குப் பிறகு முதல் ரயில் இயக்கப்பட்டது.
மேற்குவங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் ரெயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானது. சென்றுகொண்டிருந்தது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி நடந்த இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர் இதைத் தொடர்ந்து, விபத்து நடந்த பகுதியில் தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை அகற்றும் பணிகளும், அவ்வழியாக மீண்டும் ரயில்களை இயக்கும் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், விபத்து நடந்து 51 மணி நேரத்திற்குபின் விபத்து நடந்த தண்டவாளம் வழியாக முதல் ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளது. விபத்தால் சேதமடைந்த தண்டவாளங்கள் சரிசெய்யப்பட்ட நிலையில், விபத்து நடந்த பகுதி வழியாக சோதனை முறையில் இந்த ரயில் இயக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தில் தொடர்ந்து முகாமிட்டிருந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மீண்டும் தொடங்கப்பட்ட ரயில் சேவையையும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.