ஒன்றிய அமைச்சர் பொய்யை பரப்பலாமா!….. நிர்மலா சீதாராமனுக்கு எம்.பி.சு.வெங்கடேசன் கேள்வி!

June 17, 23

எஸ்ஜி சூர்யா கைதானது ‘பொய்யா’? இல்லை கட்சி தொண்டர் சூர்யாவை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைப்பது ‘பீதியை பரப்புவதா’? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய புகாரில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். 2 நாட்களுக்கு முன்பு மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் , சென்னை தியாகராய நகரில் நேர்று இரவு, அவரை மதுரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு அக்கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு கண்டனம் தெரிவித்த நிர்மலா சீதாராமன், “தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ஒரு சமூக ஊடக பதிவின் காரணமாக நள்ளிரவில் கைது செய்யபட்டார். அவர் கைது கண்டனத்திற்குறியது. பெண்ணாடம் பேரூராட்சியில் மலக்குழி மரணங்களின் மீது தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காமல் அதைப்பற்றி கேள்வி எழுப்பிய எஸ்.ஜி.சூர்யாவை தண்டிக்க முயற்ச்சி எடுப்பது நியாயமா? தமிழக அரசு உடனடியாக சூர்யாவை விடுதலை செய்ய வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டின் இரட்டை வேட நிலைப்பாடு, அதுவும் முக்கியமான சமூகப் பிரச்சினையில், வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பாஜக தொண்டர்கள் அனைவரும் மனம் தளராமல் சட்ட ரீதியாக இதனை எதிர்த்து போராடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த சு.வெங்கடேசன் எம்பி, “பொய்யையும், பீதியையும் பரப்புவதா ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வேலை? மதுரை மாவட்டத்தில் பெண்ணாடம் என்ற பேரூராட்சி இருக்கிறதா? எனப் பார்த்துவிட்டு கூட கருத்துச்சொல்ல முடியாதா? வதந்தி உங்களின் ஆயுதம். உண்மை எங்களின் கவசம்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு டிவிட்டரில் பதில் அளித்துள்ள நிர்மலா சீதாராமன், “மதிப்பிற்குரிய சு.வெங்கடேசன் எம்பி அவர்களே, எஸ்.ஜி.சூர்யா கைதானது ‘பொய்யா’? இல்லை கட்சி தொண்டர் சூர்யாவை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைப்பது ‘பீதியை பரப்புவதா’? ஒரு சமூக பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காண நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உழைப்பது நம் கடமை. இந்த உழைப்பிற்கு ஆயுதம் வேறில்லை. இதற்கு கவசம் தேவையில்லை. இதுவே உண்மை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *