June 21, 23
எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாளை (ஜுன் 22) பீகார் புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயம் பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.
இதற்கான முதல் நாள் கூட்டம் நாளை மறுநாள் ( ஜுன் 23 ) பாட்னாவில் நடைபெறுகிறது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக கைக்கோர்க்கவே இக்கூட்டத்தை எதிர்க்கட்சிகள் நடத்துகின்றன. ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமர் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார். இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா,மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
திமுக தலைவரும் தமிழக முதலமைசச்ருமான மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்க நாளை ( ஜுன் 22 ) பாட்னா புறப்படுகிறார்.