ஒரு பக்கம் வெள்ளம்,மறு பக்கம் குடிநீர் தட்டுப்பாடு- தலைநகர் டெல்லியின் பரிதாபங்கள்.

பெருக்கெடு்த்து ஓடும் யமுனா ஆறு தலைநகர் டெல்லியின் தாழ்வான இடங்களில் புகுந்து விட்டது. நேற்று பகலை விட இரவில் யமுனையின் நீர்மட்டம் மேலும் அதிகரித்ததே இதற்கு காரணமாகும். சாலைகளையும் வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் டெல்லி அரசு அவசரக் கால நடவடிக்களை இரவில் எடுக்க நேரிட்டது.

அரியானா மாநிலத்தில் உள்ள ஹத்னி குண்ட் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் அளவு அதிகரிக்கப்பட்டதே யமுனையில தண்ணீர் மட்டும் உயருவதற்கு காரணமாகும். இதனையடுத்து அரியானா அரசு வெளியேற்றும் உபரிநீரை குறைக்க உத்தரவிடுமாறு மத்திய அரசை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.அப்படி செய்வது சாத்தியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்து விட்டது.

யமுனை ஆற்றுக் கரையோரம் குடிநீரை சுத்திகரிக்கும் மூன்று நிலையங்களை டெல்லி அரசு செயல்படுத்தி வருகிறது. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக சுத்திகரிப்பு நிலையங்களை மூடி விட்டு ஊழியர்கள் வெளியேறிவிட்டனர். இதனால் தலைநகர் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயமும் உருவாகி இருக்கிறது.  வெள்ளம் காரணமாக டெல்லியில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளன. தாழ்வான இடங்களில் வசித்தவர்கள் தொடர்ந்து வெளியேற்றப் படுகின்றனர்.

“இந்த அவசரமான நிலையில் அனைத்து உயிர்களையும் காப்பாற்றுவது முக்கியமானது. ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருங்கள்” என்று கெஜ்ரிவால் உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதே வேளையில் இமய மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள இமாச்சல பிரதேசம் மாநிலத்தில்  கன மழை காரணமாக 90 பேர் உயிரிழந்து உள்ளனர். அந்த மாநில முதலைமச்சர் இப்படி ஒரு மழையை இதற்கு முன் கண்டதில்லை  என்று தெரிவித்து இருக்கிறார். மாநிலம் முழுவதும் சுமார் 30 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் போக்குவரத்து முடங்கி இருக்கிறது.

அதிகப் பயணிகளைக் ஈர்க்கக் கூடிய சுற்றுலா மையங்களான குலு, மணாலி இரண்டையும் மாநிலத்தின் முக்கிய நகரமான மண்டியுடன் இணைக்கும் சாலை பியாஸ் ஆற்றின் கரை ஓரம் அமைந்து உள்ளது.பியாஸ் பெருக்கெடுத்து ஓடுவதால் மண்டி- குலு சாலை பல இடங்களில் மூழ்கிக் கிடக்கிறது. பஞ்சாப் மற்றும் அரியான மாநிலங்களிலும் மழையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் தொடர்கிறது.

உத்தர் கண்ட் மாவட்டத்தில்  தனவுரி, ருத்ரபிரயாக் போன்ற இடங்களில் மழை எச்சரிக்கை தொடருகிறது. முக்கிய ஆன்மீக மையமான அரித்துவார் மற்றும் தலைநகர் டேராடுன் போன்ற இடங்களிலும் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது.

000

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *