அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் ‘B’ சென்டர் தியேட்டர்களில் இருந்து நாளை தூக்கப்படுகிறது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை ரிலீசான இந்தப்படம், விமர்சன ரீதியில் ‘ஆவரேஜ்’, என்ற பெயரை பெற்றது. ஆனாலும் வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லை.
கடந்த 7 நாட்களில் இந்தப்படம் உலகம் முழுவதும்.118 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.இந்திய அளவில் 71 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது.தமிழில் நாளை ஏகப்படங்கள் வெளியாகின்றன.
இதனால் பெரும்பாலான ‘பி’ சென்டர் தியேட்டர்களில்
‘விடாமுயற்சி ‘தூக்கப்படுகிறது.
—