உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராம பிரானுக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது. 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கோவிலின் கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார், வரும் ஜனவரி மாத இறுதியில் ராமர் கோயில் திறக்கப்படுகிறது.
இதனைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வர உள்ளனர். அங்குள்ள பல ஓட்டல்களில் முன்பதிவு முடிந்துள்ளது.
தலைநகர் லக்னோ மற்றும் பிற நகரங்களில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக பாரம்பர்ய கோட்டைகள் மற்றும்அரண்மனைகளை நட்சத்திர ஓட்டல்களாக மாற்ற உத்தரபிரதேச அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள பிரபல நிறுவனங்கள், இந்த அரண்மனைகளை ஸ்டார் ஓட்டல்களாக மாற்றும் பணியை மேற்கொள்ளும்.
அரண்மனைகளின் இப்போதைய வடிவம் மாறாமல், அவை புதுப்பிக்கப்பட்டு ஓட்டல்களாக மாற்றம் செய்யப்படும்.ஓட்டல்களாக மாற்றுவதற்கு இதுவரை 9 கோட்டைகள் மற்றும் அரண்மனைகளின் பட்டியலை அரசு தயாரித்துள்ளது இவற்றை .ஸ்டார் ஓட்டல்களாக மாற்றுவதற்கு 180 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
’அரண்மனை ஓட்டல்கள்’ உ.பி.மாநில சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவுவதோடு, ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கவும் வகை செய்யும்.