’ இயக்குனர் சிகரம்’ கே.பாலச்சந்தர். தான் இயக்கிய அனைத்து படங்களிலும், நாகேஷுக்கு ஒரு கேரக்டரை வைத்திருப்பார் .
ரஜினிகாந்த் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கிய‘தில்லுமுல்லு ‘படத்தில் நடிகராகவே நடித்திருப்பார்,நாகேஷ்,
கே.பாலச்சந்தர் –நாகேஷ் கூட்டணி அமைத்து .1967 ஆம் ஆண்டு வெளியான படம் அனுபவி ராஜா அனுபவி. நாகேஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
முத்துராமன், மனேரமரா, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.என்.லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, அனைத்து பாடல்களையும், கவியரசர் கண்ணதாசன் எழுதினார்.
இரட்டை வேடத்தில் நடித்த நாகேஷின், ஒரு வேடம் நகரத்து ஆள். இன்னொருவர் கிராமத்தான் . நகரத்தின் வாசனையே அறியாதவர்.
கிராமத்தில் இருக்கும் நாகேஷ் ‘மெட்ராஸ்’ நகரை பார்த்து வியப்படைகிறார். அதனை தனது கிராமத்து மொழியில் பாடுகிறார்.
இதுதான் ‘சிச்சுவேஷேன்’.
கண்ணதாசன் பாடல் எழுத தொடங்குகிறார்.
பல வரிகளை எழுதி முடித்த அவருக்கு திருப்தி இல்லை.
மெட்ராஸ் பற்றி இன்னும் தகவல்களை பாடலில் சொல்ல வேண்டும் என நினைத்தார் .
இந்த பாடலை பாடுபவர் நாகேஷ். மெட்ராஸ் பற்றி நாகேஷ் என்ன நினைக்கிறார் என்பதை கண்ணதாசன், அவரிடமே கேட்டுள்ளார்.
தான் மெட்ராஸ் வந்தபோது பார்த்த ஆச்சரியமான விஷயங்களை நாகேஷ் கூறியுள்ளார்.
கிராமத்தில் மாடு பால் கறக்க, கன்றுக்குட்டி தேவை. மெட்ராசில் பொம்மையை வைத்து கன்றுக்குட்டி மாதிரி செய்து அதை வைத்து பால் கறக்கிறார்கள் என்று கூறினார், நாகேஷ்.
கண்ணதாசனுக்கு சந்தோஷம், வரிகள் கிடைத்து விட்டன.
தனது உதவியாளரை அழைத்து பாடல் வரிகளை கூறினார்.’.
‘’ வைக்கேலாலே கன்னுக் குட்டி
மாடு எப்போ போட்டுது
கக்கத்திலே தூக்கி வச்சாக்
கத்தலையே என்னது
ரொக்கத்துக்கு மதிப்பில்லையே
இங்கு வெக்கத்துக்கு விலையில்லையே
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’’
என அந்த பாடல் வரிகள் முடியும்.
—