கமலின் புதிய படத்தில் ஆள்வதற்கு ஆயத்தம் என்று பஞ்ச் !

செப்டம்பர்,08-

வெள்ளித்திரையில் ரத்தம் கொப்பளிக்கும் படங்களே இப்போது பாக்ஸ் ஆஃபீசில் ஹிட் அடிக்கின்றன.ரொம்ப நாட்களுக்கு பிறகு கமலஹாசனுக்கு , கூறையை பிய்த்துக்கொண்டு பணம் கொட்டிய படம் ‘விக்ரம்-2’ கமலே தயாரித்த படம். இந்த படமும், இதனைத்தொடர்ந்து வசூலில் சாதனை படைத்த ரஜினியின் ‘ஜெயிலர்’ படமும் குருதிப்புனலில் குளித்த வந்த சினிமாக்கள்.

அனைத்து மாநில படங்களும் ‘பான் இந்தியா’தயாரிப்புக்கு மாறிய பிறகு, சினிமாக்களின் நேட்டிவிட்டி குறைந்து விட்டது. சமூக அக்கறையும் இந்தப்படங்களில் இல்லை. ’காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி’ வரையிலான ரசிகர்களை சென்றடைய வேண்டுமானால்,உலகம் முழுவதுக்கும் பொதுவான வன்முறையை சொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு டைரக்டர்கள் வந்து விட்டார்கள்.

’வெற்றி மட்டுமே பிரதானம்’ என நினைக்கும், ஹீரோக்களும் அதற்கேற்ற வகையில், தங்களை தயார் படுத்திக்கொண்டனர். அதனால் தான் ’பான் இந்தியா’எனும் பெயரில் உருவாகும் படங்களில் ரத்தம் தெறிக்கிறது. ராணுவ வீரர்களே பார்த்திராத ஆயுதங்களை இந்த படங்களில் பார்க்கிறோம்.

‘விக்ரம்’-2 வை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து‘இந்தியன் 2’ படம் வெளியாக உள்ளது. பிரபாஸ் நடிக்கும்‘கல்கி 2898 AD’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கமல். வில்லன் வேடம் என சொல்லப்படுகிறது.

இந்த இரண்டு படங்களை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கமல் நடிக்கிறார். இந்தப் படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கவும் இருக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் ‘KH233’ என அழைக்கப்படுகிறது.அதாவது கமல்ஹாசனின் 233 வது படம்.இந்த படம் குறித்து , கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் ’ட்விட்டர்’ தள பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘ட்ரெய்னிங் பிகின்ஸ்’ என்ற தலைப்புடன் தொடங்கும் அந்தவீடியோவில் கமல் துப்பாக்கி பயிற்சி எடுக்கிறார்.தோட்டாக்கள் தெறிக்கும் வீடியோவின் இறுதியில் ‘KH233 ரைஸ் டூ ரூல்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது, ரத்தம் கொப்பளிக்கும் படம் என்பதற்கு அந்த வீடியோவே சாட்சி.’தலைவா’ படத்தில் ‘டைம் டு லீடு’ என துணை கேப்ஷன் போட்டு சிக்கலில் மாட்டினார், விஜய்..

வினோத் படத்தில் ‘ரைஸ் டு ரூல்’ என கேப்ஷன் வைத்துள்ளார்,கமல்.

000

 

சினிமாவில் இப்ப உங்களோட ‘ரூல்’. விளையாடுங்க!

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *