பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள்,வாழ்வேமாயம், கல்யாண ராமன்,மூன்றாம்பிறை என ஏராளமான வெள்ளிவிழாப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்த ஜோடி-கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும்

மும்பைக்கு சென்று இந்தியில் கனவுக்கன்னியாக உருவெடுத்த ஸ்ரீதேவி அகால மரணம் அடைந்த பின் அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் சினிமா உலகில் நுழைந்தார்.

இப்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கும் ஜான்வி கபூரை தமிழில் நடிக்க வைக்க பல டைரக்டர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

லிங்குசாமி தயாரித்து இயக்கிய ‘பையா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜான்வியை நடிக்க வைக்க நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.

இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில்பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார்.

இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தை இயக்கியவர்.அந்தப்படம் பெரிய வெற்றி பெற்றதால், லவ் டுடே படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார்.

5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த படம் .100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததால். அதன் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் உச்சம் தொட்டது.

இந்நிலையில் கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பு பிரதீப்பை தேடி வந்துள்ளது.

அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. . அவர் நடிக்க வில்லை .பிரதீப் ஜோடியாக. ஜான்வி கபூரை நடிக்க வைக்க அவரது தந்தை போனி கபூரிடம் கமல்ஹாசன் பேசி முடித்து விட்டதாக கோடம்பாக்கத்தில் செய்திகள் உலா வருகின்றன,

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *