கமல்ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அவர் எந்த படத்தில் நடிக்கப்போகிறார் என்பது சஸ்பென்சாக வைக்கப்பட்டிருந்தது.
இந்தியன் -2 வை முடித்து விட்டு பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் ’ப்ராஜெக்ட் -கே’படத்தில் கமல் வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். 30 நாள் கால்ஷீட்டுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.
இதன் பின் பிக்பாஸ் அடுத்த சீசனுக்கு சென்று விட்டு, மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிப்பதாக செய்திகள் உலா வந்தன.
இந்நிலையில் கமல்ஹாசன் அடுத்து நடிக்க உள்ள ‘KH233’ படத்தை ஹெச்.வினோத் இயக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை,வலிமை, துணிவு படங்களை இயக்கியவர்.
வினோத்தின் புதிய படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
‘RISE TO RULE’ எனும் வாசகம் தலைப்பில் இருப்பதால், அரசியலை மையப்படுத்திய கதையாக இது இருக்கும் என தெரிகிறது ’இந்தப்படம் எனக்கு ஸ்பெஷலான படம். கமல் கதை எழுதியுள்ளார். அவரது கதையை இயக்குவதில் எனக்கு மகிழ்ச்சி’ என வினோத் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் ஆரம்பமாகிறது.
விஜய் சேதுபதி, இதில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்.
000