கருத்துக் கணிப்பு .. மீண்டும் மொடியாம் !

இன்னும் 7 மாதங்களில்  நடைபெறவிருக்கும்  மக்களவை தேர்தலுக்கு ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தயாராகி வருகின்றன.இப்போது  தேர்தல் நடந்தால்  முடிவுகள் எப்படி இருக்கும் என ஆங்கில தொலைக்காட்சி சேனலான டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள்  வெளியிடப்பட்டுள்ளது.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறும் என்றும்,  மூன்றாவது முறையாக  மோடி பிரதமராவர் எனவும் டைம்ஸ்நவ் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

அதன் முழு  விவரம்:

*தேசிய ஜனநாயக கூட்டணி 296 இடங்களில் இருந்து 326 இடங்கள் வரை   பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

*காங்கிரஸ் தலைமையில்  26 கட்சிகள் இணைந்துள்ள எதிர்க்கட்சிகளின், ‘இந்தியா’ கூட்டணிக்கு 160 முதல் 190 இடங்கள்  மட்டுமே கிடைக்கும்.

* தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு 33 இடங்களும், பாஜக அணிக்கு 6 இடங்களும் கிடைக்கும்.

*ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 24 முதல் 25. தொகுதிகளிலும், தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 9 முதல் 11 . தொகுதிகளிலும்  வெல்லும்.

* ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி 12 முதல் 14 . தொகுதிகளில்  வாகை சூடும்.

* குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மோடிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதால். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி செல்வாக்கு மிக்க பிரதமராக வருவார் .

இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகபிரதமராக பொறுப்பேற்று நேருவின் சாதனையை மோடி சமன் செய்வார் என அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *