மே.27
கர்நாடககாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இன்று புதிதாக 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர்.
கர்நாடகாவில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலி காங்கிரஸ் 135 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவக்குமாரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுடன் அன்றைய தினம் 8 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
இதனை தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்திவந்தது. இந்த நிலையில், கர்நாடக அமைச்சரவையில் இன்று புதிதாக மேலும் 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர். இதில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மகாதேவப்பா, எச்.கே.பாட்டீல், மது பங்காரப்பா உள்ளிட்டவர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். ஆளுநர் மாளிகையில் இன்று காலை 11.45 மணிக்கு இவர்கள் 24 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.