கலெக்டரை தள்ளிவிட்டவரை தள்ளினர் சிறைக்குள்.

ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்போது மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட நவாஸ் கனி எம்.பி-யின் உதவியாளர் விஜயராமு மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் தினேஷ்குமார் அளித்த புகாரில் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ஒரு மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கிற்கும், நிர்வாக அமைப்புக்கும் முழுப் பொறுப்புடையவர் மாவட்ட ஆட்சியர், அத்தகைய மாவட்ட ஆட்சியரையே உதாசீனப் படுத்தி கீழே தள்ளி விடும் அளவிற்கு திமுகவின் வன்முறை அரங்கேற்றி வருகிறது என்று கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியரையை தள்ளி விட்டவர் மீது ஏன் இன்னும்நடவடிக்கை இல்லை , இதுவே அம்மாவின் அரசாக இருந்திருந்தால் இப்படி நடைப் பெற்றிருக்குமா?. எதேச்சதிகாரத்தில் தன்னிலை மறந்து தரம் தாழ்ந்து நடக்கும் இந்த அரசை மக்கள் துணை கொண்டு விரட்டியடிக்கின்ற காலம் விரைவில் வரும்” என்று எடப்பாடி பழனிசாமி கண்டனத்தை பதிவு செய்து உள்ளார்.

அவருடைய அறிக்கைக்குப் பிறகே, கலெக்டரை கீழே தள்ளிவிட்டவரை போலிசார் கைது செய்து உள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *