சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி கொடுத்திருக்கிறது.
கலைஞரின் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் பணிகள் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.