கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு என்ன தான் வழி ?

மிழ்நாட்டில் கடந்த சட்டசபைத்தேர்தலின் போது திமுகல வாக்குறுதிகளை அளித்தது.

இதில் முக்கியமானது, குடும்பத்தலைவிகளுக்கு உதவும் வகையில் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் ன்றஅறிவிப்பு.

தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் உடனடியாக , பெண்கள் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற இயலவில்லை.

நிதி நெருக்கடியே அதற்கான காரணம்.

இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

ஒரு படியாக, மாதம் 1,000 ூபாய் வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளானசெப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கும்என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்புவெளியிட்டார்.

இதன் தொடர்ச்சியாக இப்போது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் மற்றும்டோக்கன்களை விநியோகம் செய்து வருகிறார்கள்.

ஆயிரம் ரூபாய் பெறுவதில் மகளிருக்கு ஆயிரம் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதற்கு தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்:

பெண்களுக்காக அரசு வழங்கும்  ஆயிரம் ரூபாய் பணம், அடித்தட்டு பெண்கள் அனைவரையும்  சென்றடைய வேண்டும் , வசதி உள்ளவர்கள் இதனால் பயன் அடையக்கூடாது என்பதற்காகவே பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

வீடுகளில் ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் மட்டுமே பலன் பெற இயலும் எனும் நிபந்தனை தொடர்பாக பலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.

தமிழகத்தில் 2.33 கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.இவர்களில் 10 லட்சம் பேர் மட்டுமே 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள்.

எனவே, ஏழைகள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.

செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.அன்றைய தினம் முதல் பயனாளிகளின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படும்.

அக்டோபர் மாதம் முதல் 5 ஆம் தேதிக்குள் வங்கிக்கு பெண்கள் உதவித்தொகை பணம் சென்று விடும்.

வங்கி கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக கணக்கு தொடங்க வேண்டும். தபால் நிலையங்களில் விரைவாக கணக்கு தொடங்கலாம்.

முகாமில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும்.நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், ஆர். டி,. அல்லது துணை ஆட்சியரிடம் விண்ணப்பம் கொடுக்கலாம்.

  1. உதவித்தொகை பெறும் பெண் இறந்து விட்டால், அதே குடும்பத்தில் மற்றொரு பெண் அந்த தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.’’
Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *