கவுண்டமணி டயலாக்கும் மராட்டிய அரசியலும்.

அரசியலில் இதெல்லாம் சகஜம்பா என்று கவுண்டமணி பேசும் வசனம் அடிக்கடி மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது.

மராட்டியத்தில் தேசிய வாத காங்கிரசில் இருந்து கடந்த வாரம் சுமார் 30 எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறி பாரதீய ஜனதா கூட்டணியில் சேர்ந்து முதலைமச்சர்பதவியை பெற்றவர் அஜித்பவார். இவர் சரத் பாவரின் அண்ணன் மகன் ஆவார். கட்சியில் இரண்டவாது இடத்தில் இருந்தவர். திடீரென சரத்பவார் தமது மகள் சுப்ரியாவை முன்னிலைப்படுத்தி கட்சியில் செயல் தலைவர் பதவி கொடுத்தது தம்மை ஓரங்கட்டும் செயல் என்பதே அஜித் பவாரின் கட்சி உடைப்புக்கு காரணம் ஆகும்.

அதன் பிறகு தன் பக்கம் இருப்பதுதான் உண்மையான தேசிய வாத காங்கிரஸ் என்று தேர்தல் ஆணையத்தில் கடிதமும் கொடுத்து சரத் பவாரை வெறுப்பேற்றவும் செய்தார் அஜித்.

சரத்பவாரும் அஜித்பவார் மற்றும் அவருடன் அமைச்சர் பதவி ஏற்ற எட்டு பேர் உட்பட ஒன்பது பேரின் எம்.எல்.ஏ. பதவியையும் கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் பறிக்க வேண்டு்ம் என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து உள்ளார்.

இவ்வளவு களோபரங்களையும் செய்துவிட்டு அஜித்பவார் இன்று திடீரென சரத்பவாரை சந்திக்க வந்தது மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.அஜித்பவார் மட்டும் தனியாக வரவில்லை, தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி தம்மோடு வந்த எம்.எல்.ஏ.க்களையும் பிரபுல்பட்டேல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் அழைத்துக் கொண்டு வந்ததுதான் ஆச்சரியம்.

எதற்கு இந்த திடீர் சந்திப்பு என்று கேட்டதற்கு பிரபுல் பட்டேல் “எங்கள் அரசியல் கடவுள் சரத்பவாரை சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்கு வந்தோம்.அவரும் எங்களை ஆசிர்வதித்தார்” என்று சொல்லிவிட்டுப் போனார்.

கடவுளுக்கு துரோகம் செய்யலாமா என்று பிரபுல் பட்டேலிடம் கேட்டால் என்ன சொல்வாரோ ?

ooo

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *