காதலுக்காக பாகிஸ்தான் சென்ற அஞ்சு,, திருமணத்திற்கு கணவர் எதிர்ப்பு !

ஜுலை, 28-

எல்லைத் தாண்டி பாகிஸ்தானுக்குச் சென்று முகநூல் நண்பரை  திருமணம் செய்து கொண்ட அஞ்சுவின் இந்திய கணவர் அரவிந்த் அல்வாரில், தாங்கள் இன்னும் விவாகரத்து செய்யவில்லை, எனவே, அவரால் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தெரிவித்து பரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்தியாவின் உத்திரபிரதேசத்தை சேர்ந்த அரவிந்தும் அவருடைய மனைவி அஞ்சுவும்(வயது 34 ) ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வந்தனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் மகளுக்கு வயது 15.

அஞ்சு, கடந்த மூன்று வருடங்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா என்ற 29 வயது இளைஞருடன் முகநூல் வழியாக பழகி வந்தார், நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து அவரை நேரில் பார்க்க முடிவு செய்த அஞ்சு, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலம் ஒரு மாத கால விசா பெற்று உள்ளார். இதன் பின்னர் கணவரிடம் ஜெய்ப்பூர் சென்று வருவதாக பொய் சொல்லிவிட்டு பஞ்சாப் மாநில எல்லையில் உள்ள வாகா சோதனைச் சாவடி வழியாக பாகிஸ்தானுக்குள் சென்று விட்டார். எல்லையில் இருந்து பேருந்ததுள் மூலம் கைபர் பக்தூன் பகுதியில் உள்ள நஸ்ருல்லா விட்டை அடைந்தார்.

அங்கு அவரிடம் பாகிஸ்தான் நாட்டு போலிசார் விசாரணை நடத்தினார்கள். அஞ்சுவிடம் ஒரு மாதக காலத்திற்கான விசா இருப்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் பிறகு அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி பாத்திமா என்று பெயர் வைத்துக்கொண்டு நஸ்ரூதினை திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல் இரண்டு் நாட்டு ஊடகங்களிலும் பரபரப்பாக வெளியானது.

இந்த நிலையில் பாகிஸ்தான் ஊடகங்களுக்கு நசருல்லா அளித்த பேட்டியில், `திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தில் நாங்கள் இல்லை. விசா காலம் முடிந்ததும், ஆகஸ்ட் 20-ம் தேதி அஞ்சு இந்தியா திரும்புவார். எங்கள் வீட்டில் தனி அறையில் மற்றப் பெண்களுடன் அஞ்சு தங்கியுள்ளார்’ என்று கூறினார்.

இதை மறுத்துள்ள போலிஸ் அதிகாரி நசீர் சத்தி, “கடந்த செவ்வாயன்று நீதிமன்றத்தில் அஞ்சுவும் நஸ்ருல்லாவும் திருமணம் செய்து கொண்டனர்”என்று கூறியுள்ளார்.

மற்றொரு காவல் துறை அதிகாரி, உள்ளூர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று பாத்திமா என்ற அஞ்சுவை நஸ்ருல்லா திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்து இருக்கிறார்.இந்த நிக்காஹ்வின் போது நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

அஞ்சு இந்தியாவில் இருந்த போதே இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாகவும் அதன் அடிப்படையில் தான் பாகிஸ்தான் நாட்டுக்கு வந்து நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொள்ள விசா கிடைத்ததாகவும் அநத் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

அஞ்சு மற்றும் நஸ்ருல்லா திருமணம் செய்ததாகக் கூறப்படும் ஆவணங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த ஆவணங்களில் அஞ்சுவின் பெயர் ஃபாத்திமா என்றுதான் எழுதப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அஞ்சுவின் கணவர் அரவிந்த். தாங்கள்இன்னும் விவாகரத்து செய்யவில்லை, எனவே எல்லைக்கு அப்பாற்பட்ட நபரை அவரால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார்.

இந்த செய்தியை படிக்கும் போது காதலுக்கு கண் (எல்லை) இல்லை என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

000

 

 

 

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *