“ காமக் காசியின் ஆபாச வீடியோ” வில் சிக்கிய பெண்கள் நிம்மதி…

ஆபாசப் படம் எடுத்து பெண்களை மிரட்டிய நாகர் கோயில் காசியின் வலையில் சிக்கிய பெண்கள் கொஞ்சம் பயத்தில் இருந்து விடுபட்டு உள்ளனர். சாகும் வரை காசி சிறையில் இருக்குமாறு நாகர்கோவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அவர்களை நிம்மதி அடையச் செய்து இருக்கிறது.

நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் காசி (வயது 28), என்ஜினீயர். மாநிறத்துடன் உள்ள நல்ல தோற்றமே இவருக்கு ஆபத்தாக அமைந்துவிட்டது. பல பெண்கள் அவன் மீது காதல் கொண்டனர். அந்த பெண்களுடன் இணக்கமாக பேசி அவர்களை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் உறவுக் கொள்வதும் , அதை கவனமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவதும் காசி வாடிக்கையாகக் கொண்டான்.

அவனுடைய பெண் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் பெண் சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஆவார். அவர், காசி மீது கடந்த 2020-ம் ஆண்டு முதல் புகாரைக் கொடுத்தார். இதன் பிறகு கன்னியா குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 27 வயது இளம் பெண், பள்ளி மாணவி என அடுத்தடுத்து பலபெண்கள் பாலியல் புகார்களைக் கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண்கள், புகாரில் தங்களுடன் காசி நெருங்கிப் பழகி ஆபாச படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவதாகக் கூறியிருந்தனர். இது போதாது என்று காசி மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி புகார் ஒன்றும் வந்து சேர்ந்தது.

இதை அடுத்து காசியை சுற்றி வளைத்தப் போலிசார் அவனுடைய  செல்போனை ஆராய்ந்து, அதில் பெண்கள் சிலரின் ஆபாசாப் படங்கள் இருப்பதைக் கண்டனர்

உடனே அவன் மீது போலீசார் தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்தனர். ஒன்று, இரண்டல்ல மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசால் முதலில் காசியின் நண்பர் ஒருவரை கைது செய்யப்பட்டார்.

செல்போனில் இருந்த ஆபாசாப் படங்களை கண்டு அதிர்ச்சியில் இருந்த சிபிசிஐடி போலிசார் அவனுடைய லேப் டாப் எங்கே என்று தேடினார்கள். அதனை தந்தை தங்கப்பாண்டியன் அவருடைய  கோழிப்பண்ணையில் பதுக்கி இருப்பதை கண்டு பிடித்தனர். லேப்டாப்பில் மட்டும் 400 ஆபாச வீடியோக்கள், 1000 ஆபாசப் படஙகளைக் காசி சேகரித்து வைத்து இருந்தது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. காசிக்கு உதவும் வகையில் சாட்சியங்களை அழித்ததாக தங்க பாண்டியனும் கைது செய்யப்பட்டார் . பின்னர் அப்பா, மகன் இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். சில நாட்கள் கழித்து தங்கபாண்டியனுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

ஆனால் காசிக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. அதாவது 8 வழக்குகளில் 7 வழக்குகளில் அவனுக்கு ஜாமீன் கிடைத்தது. ஒரு வழக்கில் மட்டும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான்.

நாகர்கோயில் பெண்கள் நீதிமன்றம் காசி மீதான 8 வழக்குகளில் 6 வழக்குகளை விசாரித்தது. ஒரு வழக்கு போக்சோ கோர்ட்டிலும், மற்றொரு வழக்கு 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும் நடந்து வருகிறது.

இதில் நாகர்கோவிலைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்கை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் விசாரணை நடத்தி தீர்ப்புக் கூறினார். இந்த வழக்கில் தான் காசி ஜாமீன் கிடைக்காமல் மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்தான். தீர்ப்பு கூறப்படுவதை அடுத்து காசி, பாளையங்கோட்டை சிறையில் இருந்து நாகர்கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து வரப்பட்டு இருந்தான்.

காசியை குற்றவாளி என்று நீதிபதி ஜோசப் ஜாய் அறிவித்த போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் அவர், இளம்பெண்ணை கட்டாயப் படுத்தி உடல் உறவுக் ( பாலியல் பலாத்காரம்) கொண்ட குற்றத்துக்காக காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத்தை தொகையை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்து இருக்கிறார்.

பாலியல் பலாத்கார வழக்கில் 3 பிரிவுகளின் கீழ் காசிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது இளம்பெண்ணை பலவந்தப் படுத்தி உறவுக் கொண்ட குற்றத்துக்காக (376 2என்) சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் இளம் பெண்ணை ஆபசாமாக வீடியோ எடுத்த குற்றத்துக்காக (354 சி) 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் போட்டு தீர்ப்பளித்தார். கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தண்டனைகள் அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

இதை அல்லாமால் காசி மீதான இன்னும் 7 வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வழக்குகளி்லும் கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டு உள்ளதார்ல அவற்றில் இருந்தும் காசி தண்டனை பெறாமல் தப்பிக் வழியில்லை.

காசி இந்த வழக்கில் சிக்கிய உடனேயே அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் அச்சத்தில் உறைந்து கிடந்தனர்.எங்கே நாம், காசியுடன் இருந்த படம் வெளியாகிவிடுமே என்றக் கவலை அவர்களை வாட்டியது. இப்போது காசிக்கு சாகும் வரை சிறை தண்டனை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதால் அவர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *