ஜனவரி -07,
துபாயில் கார் ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித்குமார் சென்ற கார் விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கார் விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய அஜித், காயமின்றி நலமுடன் இருப்பதாக தகவல் வெளயியானதால் அனைவரும் பதற்றத்தில் இருந்து மீண்டு உள்ளனா்.
தமிழின் முன்னணி நடிகரான அஜித்-க்கு வயது 53 ஆகிறது. கார் பந்தயங்களில் கலந்து கொள்வது அவருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.
அண்மையில் விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்து அஜித் வழக்கம் போது பயிற்சிக்காக துபாய் சென்றிருந்தார். பயிற்சியின் போது கார் விபத்துக்கு ஆளானதால் அவருடைய ரசிகர்கள் பெரும் பதற்றத்திற்கு ஆளானார்கள்.
*