சென்னை தரமற்ற செருப்பை விற்பனை செய்த கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் இராயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வடசென்னை காலடிப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ஏகே மணி(வயது53). இவர் கடந்த மாதம் 12 ஆம் தேதி அன்று ராயபுரத்தில் அமைந்துள்ள ஜம்ஜம் செருப்பு கடையில் ஒருஜோடி செருப்பை ஒன்றை தனக்கு வாங்கியுள்ளார். பின்னர் அந்த செருப்பை கடந்த 5 நாட்களுக்கு முன்னராகதான் பயன்படுத்தியுள்ளார். அந்த செருப்பை அணிந்த ஒருமணி நேரத்திலேயே காலில் வலி ஏற்பட்டு கொப்பளங்கள் உண்டாகியுள்ளது. மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்ற அவரிடம், மருத்துவர்கள் அவர் அணிந்த காலணியால் தான் இந்த கொப்பளங்கள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கடைக்கு சென்று கடைஊழியர்களிடம் கேட்டதற்கு சரியாக முறையாக பதில் அளிக்காததால், அதிருப்தி அடைந்த மணி இராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தரமற்ற பொருட்களை விற்பனை செய்த கடையில், அது தொடர்பாக கேட்கச் சென்றபோது, கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்துள்ளார். இதனிடையே, புகாரை பெற்று கொண்ட இராயபுரம் போலீசார் அதற்கு சிஎஸ்ஆர் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மணி குற்றம்சாட்டியுள்ளார்.