குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

ஏப்ரல்.28

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்தார். அப்போது, கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை குடியரசுத் தலைவரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதல்-அமைச்சரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட குடியரத்தலைவர், ஜூன் 5-ந் தேதி தமிழகம் வருகிறார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) ஜனாதிபதி திரவுபதி முர்முவை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து, சென்னை – கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்திட அழைப்பு விடுத்தார்.

முன்னதாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர், “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி அறிவித்தார்.
சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1,000 படுக்கைகளுடன் கூடிய, சுமார் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் ரூ.230 கோடி செலவில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவினை ஒட்டியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி திரௌபதி முர்முவை இந்த விழாக்களில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

முதல்-அமைச்சரின் அழைப்பினை ஏற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஜூன் மாதம் 5-ம் தேதி சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *