ஏப்ரல்.17
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, 200 யூனிஸ்ட் மின்சாரம், இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்படும் என ராகுல்காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார்.
கர்நாடாகவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன.
இந்நிலையில், இந்தத் தேர்தல் ராகுல்காந்தி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாரத் ஜோடோ யாத்திரையின்போது கர்நாடகா அரசியல் நிலவரத்தையும், மக்களின் வலியையும் உணர்ந்து, குருக லட்சுமி, குருக ஜோதி, அன்ன பாக்யா, யுவ நிதி ஆகிய புதிய திட்டங்களை வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். குருக லட்சுமி திட்டத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குருக ஜோதி திட்டத்தில் அனைத்து குடும்பங்களுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்ன பாக்யா திட்டம் மூலம் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ அரிசியும், யுவ நிதி திட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பணமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாஜகவின் 40 சதவீத கமிஷன் அரசாங்கத்தின் தவறான செயல்களை, இந்த 4 திட்டங்கள் மாற்றும் என்றும் அந்தப் பதிவில் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.