இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்
நடிகர் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி ‘படம்
உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.
தமிழ் நாட்டில் ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ்.
‘குட் பேட் அக்லி’ படத்தை பார்த்த நெட்டிசன்கள்
கொடுத்த விமர்சனங்கள் இங்கே:
கேரளா ரசிகர்கள்’’
இந்த படம்பிளாக்பஸ்டர்- இதுதான் படம்.
நாங்கள் விஜய் ரசிகர்கள். ஆனால் எங்களுக்கே படம் பிடித்துள்ளது. எல்லோருக்கும்
பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர்.
மங்காத்தாவிற்கு பிறகு எல்லோருக்கும் பிடிக்கும்
வகையில் படம் எடுத்துள்ளனர் ‘என்று கூறியுள்ளனர்.
சில நெட்டிசன்கள்.. ‘’படத்தின் சில காட்சிகள்
ஓகே ரகம். ஆனாலும் கண்டிப்பாக படம் மாஸ்
என்டர்டெயினர்.
முக்கியமாக தமிழில் பெரிய கமர்ஷியல் ஹிட் படமாக இருக்கும். இண்டர்வல் சிறப்பாக உள்ளது.
ரெட் டிராகன் வருகைக்கு காத்திருக்க வைக்கிறார்கள். படத்தில் அந்த அளவிற்கு காட்சிகள் சிறப்பாக உள்ளன. கிளைமேக்சில் எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு
காட்சிகள் உள்ளன’’
என கூறி உள்ளனர்.
—