‘குட் பேட் அக்லி’படத்தின் ப்ரீமியர் காட்சியை , பட ரிலீசுக்கு முதல் நாள் இரவிலேயே நடத்த அதன் விநியோகஸ்தர் முடிவு செய்துள்ளார்.
‘விடாமுயற்சி ‘படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ‘அல்டிமேட்ஸ்டார்’ அஜித் நடித்த திரைப்படம் ‘குட் பேட் அக்லி’.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அண்மையில் . வெளியிடப்பட்ட இதன் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த படத்தின் தமிழக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
வழக்கமாக ஒரு படத்தின் ‘ப்ரீமியர் ஷோ’ படம் வெளியாகும் நாளன்று அதிகாலையில் நடைபெறும்.
ஆனால் அஜித் படத்தின் ‘ப்ரீமியர் ‘ காட்சியை ரிலீசுக்கு முதல் நாளில்- அதாவது 9ஆம் தேதி இரவு 10:30 மணிக்கே நடத்த முடிவு செய்திருக்கிறார் , ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனர் ராகுல்.
இதற்காக தமிழக அரசிடம் சிறப்பு அனுமதியை பெறும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
விடாமுயற்சி தோல்வி அடைந்துள்ள நிலையில், குட் பேட் அக்லி’
படத்தின் ‘ரிசல்ட்;அஜித்துக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.-
—