ஜனவரி – 07.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்’அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்துள்ள திரைப்படம் – குட் பேட் அக்லி’..
த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்..
கோடை விடுமுறையையொட்டி, இந்தப்படம் ரிலீஸ் ஆவது உறுதியாகி இருக்கிறது.
கையில் துப்பாக்கியுடன் இருக்கும் அஜித்தின் புகைப்படத்துடன் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அஜித் ரசிகர்களுக்கு சந்தோஷம்தான்.ஆனால் இந்த படத்துக்கு முன்பே தொடங்கப்பட்டு, ஷுட்டிங்கும் முடிந்துள்ள அஜித்தின் இன்னொரு படமான விடாமுயற்சி குறித்து சத்தமே இல்லை.
பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்த ‘விடாமுயற்சி’ திடீரென ஒதுங்கி கொண்டது.
தவிர்க்க இயலாத காரணங்களால் ‘விடாமுயற்சி’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என அந்த படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால் அந்தப்படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை.
குட் பேட் அக்லிக்கு முன்பாக விடாமுயற்சி வெளிவருமா ?அல்லது அதன்பிறகு ரிலீஸ் ஆகுமா? என்பது தெரியவில்லை.
.இதனால் அஜித் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி, ஒருபடியாக படத்தை முடித்துள்ளது, லைகா நிறுவனம்.
ஆனால் ‘ இந்த கதை எங்களுடையது – 150 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும்’ என ஹாலிவுட் கம்பெனி ஒன்று, லைகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனால் இடியாப்ப சிக்கலில் தவிக்கிறது, அஜித் திரைப்படம்.
*