முன்னொரு காலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தமிழில் ஐந்தாறு சினிமாக்கள் வெளியாகும். நாளடைவில், அந்த எண்ணிக்கை குறைந்திருந்தது.கொரோனா காலகட்டத்தில், தியேட்டர்கள் மூடப்பட்டு, சினிமா தொழிலே முடங்கியது.
கொரோனா காலம் முடிவுக்கு வந்தபின் தமிழ் சினிமா மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. முன்பு போல் அதிக படங்கள் தயாராகின்றன. ரிலீஸ் ஆகின்றன. அடுத்த மாதல் ஜெயிலர் வர உள்ளது. அதற்கடுத்த மாதங்களிலும் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகிறது
அதனால், சிறிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை இந்த இடைவெளியில் ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறார்கள். வரும் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 7 படங்கள் வெளியாக உள்ளன.
இவற்றில், முன்னான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தயாரிப்பில் உருவாகியுள்ள‘எல்ஜிஎம்’,சந்தானம் நடித்துள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஆகிய இரண்டு படங்கள் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன. இவற்றோடு பரத் நடித்துள்ள’லவ், மற்றும் டெரர், டைனோசர்ஸ், பீட்சா 3, அறமுடைத்த கொம்பு’ ஆகிய படங்களும் வெளியாகிறது. இவற்றில் ரசிகரை கவரும் படம் எதுவோ?
000