கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வேம்பனூர் குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடித்த போது மீன்வலையில் 2,000 ரூபாய் நோட்டு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு இழப்பு செய்யப்பட்டுள்ளது,இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் வேம்பனூர் குளத்தில் மீன் பிடி தொழிலாளர்கள் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த மீன் வலையில் 2,000 ரூபாய் நோட்டு கட்டுகள் சிக்கின.
20 நோட்டுக்கட்டுகள் இருந்தன, அந்த நோட்டுகட்டுகளில் சில்ட்ரன்ஸ் பேங்க் ஆப் இந்தியா என்று குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டுகள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் புதிய ரூபாய் நோட்டு கட்டுகளில் உள்ளது போல் வங்கி நூல் கட்டும் போடப்பட்டு இருந்தது. இது குறித்த தகவல் பரவியதை தொடர்ந்து ஏராளமான மக்கள் பார்வையிட வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஆசாரிப்பள்ளம் போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதியில் சினிமா சூட்டிங் நடந்ததாக கூறப்படும் நிலையில், படப்பிடிப்பு முடிந்த பிறகு பணக்கட்டை வீசி எரிந்து சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.