பிப்வரி -03.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் லட்சக் கணக்கான மக்கள் நீராடும் கங்கை ஆற்றில் , சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உடல்கள் கொட்டப்பட்டதால் மிகவும் மாசுபட்டுவிட்டது என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் கூறி உள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஆன்மீக விழவான மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றதாக யோகி ஆதித்யநாத் அரசு கூறுவதும் உண்மையில்லை என்று ராஜ்யசபா எம்.பி.யான திருமதி பச்சன் தெரிவித்து இருக்கிறார். கூட்ட நெரிசலின் போது ஏற்பட்ட இறப்புகள் குறித்த உண்மையான புள்ளிவிவரங்களை உத்திர பிரதேச அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
இந்துக்களுக்கு புனிதமான நிகழ்வான மகா கும்பமேளா ஜனவரி 13 -ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 -ஆம் தேதி முடிவடைகிறது. ஜனவரி 29 – ஆம் தேதி, மௌனி அமாவாசை நாளன்று “அமிர்த ஸ்நானம்” போது, கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி சங்கமமான சங்கமத்தில் புனித நீராட முயன்றவர்களில் குறைந்தது 30 பேர் இறந்துவிட்டதாக உபி அரசு தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.
*