June 16, 23
குறுவை சாகுபடிக்காக கல்லணையை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.
தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று நள்ளிரவு கல்லணை வந்தடைந்தது. இதனையடுத்து பாசனத்திற்காக கல்லனணையை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட ஆட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கல்லணையில் நெல் மணிகளையும், மலர்களையும் தூவி திறந்து வைத்தனர்.
நடப்பாண்டு தஞ்சை மாவட்டத்தில் 1,08,951 ஏக்கரும், திருவாரூரில் 92,214 ஏக்கரும், நாகப்பட்டினத்தில் 22805 ஏக்கரும், மாயவரத்தில் 93,750, கடலூரில் 24,976 ஏக்கர் என மொத்தம் 3,42,696 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக காவேரியில் 500 கன அடியும், வெண்ணாற்றில் 500 கன அடியும், கொள்ளிடத்தில் 500 கன அடியும், கல்லணை கால்வாயில் 100 கன அடியும் திறக்கப்படுகிறது.