குழந்தை தொழிலாளர்களை கண்டால் 1098 எண்ணுக்கு அழையுங்கள்- அமைச்சர் சி.வி.கணேசன்

June 12, 23

குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என தொழிலாளர் நலன் துறை அமைச்சர் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள ஜீவா பூங்காவில் உலக குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கத்தில் தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, தொழிலாளர் நலத்துறை செயலாளர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், நடிகை தேவயானி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். தியாகராயர் நகர், ஜவா பூங்காவில் இருந்து தொழிலாளர் நலன் அமைச்சர் தலைமையில் பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி .கணேசன், “தமிழகத்தை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு அரசு அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது. மாணவர்களிடையே குழந்தைகள் தொழிலாளர் குறித்து குறும்படம், சுவரொட்டிகள், நாடகம் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார். வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் இருந்தால் உடனடியாக 1098 என்ற எண் மூலம் புகார் தெரிவித்தால் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், குழந்தை தொழிலாளர்களை தடுப்பதற்காக மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மூலம் தமிழகத்தில் குழந்தைகள் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது” என்றார்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *